கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயம் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வெள்ளிகோடு பகுதியில் குழந்தைகள் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது இங்கு தாய் அல்லது தந்தை இல்லாத தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கியுள்ளனர் இந்நிலையில் நேற்று பள்ளியாடி தனியார் பள்ளியில் பயில சென்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் இருவரும் பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவரும் சேர்ந்து பள்ளியிலிருந்து மாலை காப்பகத்திற்கு வந்த பின் திடீரென மாயமாகினர் அவர்களை அருகில் உள்ள பகுதிகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் காப்பக நிர்வாகி பியூட்சன் ஹெர்பர்ட் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதனையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது வெள்ளி கோடு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதோடு சக மாணவிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது விரைவில் மாணவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர் காப்பகத்தில் இருந்து மூன்று பெண் குழந்தைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது