துபாயில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணிகள் மோதின.
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ‘ஆல்-ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வளிக்கப்பட, போலார்டு அணியை வழிநடத்தினார்.
டுபிளசி, மொயீன் அலி, டுவைன் பிராவோ, ஜோஷ் ஹேசல்வுட் என, வெளிநாட்டு வீரர்கள் சென்னை அணியில் இடம் பிடித்தனர்.
‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.
துவக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டுபிளசி களமிறங்கினர். ஆரம்பம் முதலே சென்னை அணியின் விக்கெட்கள் ஒரு இலக்கத்தில் சறிய, மறுமுனையில் பொறுப்பாக ஆடினார் ருதுராஜ். பின் இணைந்த ருதுராஜ், ரவிந்திர ஜடேஜா ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. ருதுராஜ், அரைசதம் அடிக்க சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணியும் மளமளவென விக்கெட்களை பறிகொடுத்தது. பொறுப்பாக ஆடிய சவுரப் திவாரி அரைசதமடித்தார்.
கடைசியில் மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன் மட்டும் எடுத்து, 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சென்னை சார்பில் பிராவோ 3, தீபக் சகார் 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை ருதுராஜ் வென்றார்.
இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேல்சர்ஸ் அணியும் மோதிக்கொள்ளயுள்ளன.
இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது