வடகிழக்கு பருவமழைக்காலம் துவங்க உள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.வீ.முரளீதரன் தலைமையில் நடந்தது.
ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நான்கு மாதங்கள் தென்மேற்கு பருவமழைக்காலமாகவும் அக்டோபரில் துவங்கி ஜனவரி வரையிலான நான்கு மாதங்கள் வடகிழக்கு பருவமழைக்காலமாகவும் கருதப்படுகிறது. அந்தவகையில் இன்னும் இரண்டு வாரங்களில் வடகிழக்கு பருவமழைக் காலம் துவங்குகிறது.
தேனி மாவட்டத்தை பொருத்த அளவில் தென்மெற்கு பருவமழைக் காலத்தை விட வடகிழக்கு பருவமழைக்காலத்தில் தான் அதிக ,மழை கிடைக்கும் என்பது வழக்கமாக உள்ளது.
இதையடுத்து வடகிழக்கு பருவமழைக்காலத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில், குறிப்பாக தேனி மாவட்டத்தில் உள்ள வைகை, மஞ்சளாறு, சண்முகா நதி, சோத்துப்பாறை அணைகளிலும், லோயர்கேம்ப் முதல் வைகை அணை வரையிலான முல்லைப்பெரியாறு அணையின் நீரோட்ட பாதைகளிலும் ல், பருவமழைக்காலங்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்படுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்ட,ம் தேனி ஆட்சியர் கே.வீ.முரளீதரன் தலைமையில் நடந்தது. தேனி ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற அரங்கில் நடந்த கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அணைகள் மற்றும் அணைகளின் நீரோட்ட பாதைகள் தவிர ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிற்குள்ளும் உ:ள்ள குளம், ஏரி ஆகியவற்றின் கரைகள் பலமாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்வது, மதகுகளை இயக்கி சரிபார்ப்பது, குளம், ஏரிகளுக்கு நீர் செல்லும் பாதைகளை ஆராய்வது போன்றவற்றை பருவமழை துவங்கும் முன்பே சீர் செய்து பருவமழையை ஆபத்தில்லாமல் எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.