• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

குஜராத், மத்தியபிரதேசத்திலிருந்து ராகுல்காந்தி நடைபயணத்தை துவங்கியிருக்கவேண்டும்- பிரசாந்த் கிஷோர்

ByA.Tamilselvan

Sep 22, 2022

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. . இந்த நிலையில் நிதிஷ் குமாரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறியதாவது இனிமேல் எந்தவொரு அரசியல் கட்சிக்காகவும் பணியாற்றுவதை நிறுத்திவிட்டேன். மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன். பீகாரில் நடைமுறையில் உள்ள அமைப்பை மாற்ற திட்டமிட்டு உள்ளேன். பீகாரில் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நடை பயணம் செய்ய உள்ளேன். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள குஜராத், மத்தியபிரதேசம், அல்லது பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் இருந்து ராகுல்காந்தி பிரசாரத்தை தொடங்கி இருந்தால் பயனுள்ளதாக இருந்து இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.