• Fri. Apr 26th, 2024

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

ByA.Tamilselvan

Sep 9, 2022

டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் கட்டிட இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கி அலறினார்கள். இதைத்தொடர்ந்து 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *