• Sun. Sep 15th, 2024

நாடகமாடி 3 கிலோ தங்கம் கடத்தல். 3 பேர் கைது ;

By

Aug 27, 2021 ,

சென்னை அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவா் விமான நிறுவனங்களுக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னை 3 பேர் கொண்ட கும்பல் தாக்கி, செல்போன், இருசக்கர வாகனம், அதிலிருந்த 8 பார்சல்களை பறித்து சென்றதாக கடந்த 23 ஆம் தேதி பல்லாவரம் போலீசில் புகார் செய்தார்.இதனையடுத்து விசாரனையில் பார்சல்கள் பற்றி சரவணன், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் சரவணன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததை அடுத்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பார்சல்களில் தங்கக் கட்டிகள் இருந்ததாகவும் துபாயில் இருந்து வந்த தங்க கட்டிகளை, தனது நிறுவன உரிமையாளர் இம்ரானிடம் ஒப்படைக்க சென்றபோது நண்பர்களுடன் சேர்ந்து அபகரிக்க நினைத்ததாக தெரிவித்தார்..

இதையடுத்து பல்லாவரம் உதவி ஆணையர் ஆரோக்கிய ரவீந்திரன் தலைமையில் போலீசார், சரவணனுடன் பணிபுரியும் பிரபு ராம் விமான நிலைய சோதனை பிரிவில் பணிபுரியும் முகமது நஷீத் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இவா்கள் வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்துபவர்களுக்கு உதவி செய்ததாகவும் பின்னர் கடத்தல் நாடகத்தில் பங்கேற்றது, திருவல்லிக் கேணியை சேர்ந்த ஷேக் முகமது, அவர் நண்பர்கள் இஸ்மாயில், மணி ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்புடைய 9 கிலோ தங்கத்தை பிரபுராமிடம் அவர்கள் கொடுத்தது தெரியவந்தது .பின்னர் அந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறை வாக உள்ள ஷேக், இஸ்மாயில், மணி, துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வர செய்த இம்ரான் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *