• Mon. Oct 14th, 2024

3 இட்லி,1 வடை,1டீ – சாப்பிட்டால் இலங்கையில் பில் எவ்வளவு வரும் தெரியுமா?

ByA.Tamilselvan

Apr 20, 2022

3 இட்லி,1 வடை,1டீ – சாப்பிட்டால் இலங்கையில் பில் எவ்வளவு வரும் தெரிந்தால் நம் கண்ணில் கண்ணீர்தான் வரும்.
கடந்த 50 நாட்களுக்குமேல் போரால் பாதிக்கப்பட்டஉக்ரைனை விட மோசமான நிலையில் இலங்கை இருப்பதாக சொல்கிறார்கள்.
அடைகள் உற்பத்தி,சுற்றுலா,தேயிலை ஏற்றுமதி போன்றவற்றை நம்பி இருந்தது இலங்கையின் பொருளாதாரம்.கடந்த இரண்டு ஆண்டுகளா உலக முழுவதும் ஏற்பட்ட கரோனா தாக்குதல் இலங்கையின் பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது.மேலும் தற்போது இலங்கையில் ஆட்சி நடத்தும் பக்சே குடும்பத்தினரின் தவறான ஆட்சி முறையும் ஒரு காரணம். இலங்கையின் இன்றைய நிலைக்கு நானும் ஒருகாரணம் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புக்கொண்டார்.
இலங்கையில் தற்போது நிலவரப்படி பொட்ரோல்விலைரூ338க்கு விற்கப்படுகிறது. பொட்ரோல் விலை உயர்வால் உணவு பொருட்களினி விலையும் தறுமாறாக உயர்ந்துள்ளது.
இலங்கையில் ஓட்டல் ஒன்றில்சாப்பிட்ட நண்பர் அனுப்பியபில் கிடைத்தது .3 இட்லி,1 வடை ,1டீ சாப்பிட்டவருக்கு வந்த பில் ரூ440. பில்படி பார்த்தால் 1 இட்லி ரூ90. வடை ரூ80,டீரூ.80 . அதிர்ச்சியும்,கண்ணீரையும்வரவழைக்கிற விலைவாசி உயர்வாக இருக்கிறது. இப்படியே போனால் இலங்கையில் பட்டினிச்சாவில் பலர் பலியாககூடும்.
இன்னும் 1 ஆண்டுகுள் இந்தியாவிலும் இந்த நிலை வரலாம் என எதிர்கட்சிகள் எச்சரித்துவருகின்றன. இந்தியாவின் நிலை என்ன ஆகுமோ ,,எப்படி இருக்குமோ ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *