• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நிவாரண பொருட்களை வழங்க தயார் நிலையில் 3 ஹெலிகாப்டர்கள்..!

ByKalamegam Viswanathan

Dec 21, 2023
புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக மூன்றாவது நாளாக இன்றும்  மதுரை விமான நிலையத்திலிருந்து நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல மூன்று ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிலையில் உள்ளது. 
வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ஹெலிகாப்டர்கள் தாமதமாக 7:30 மணிக்கு புறப்படும் என விமான நிலைய அதிகாரிகள் கூறினார். மூன்று ஹெலிகாப்டர்களில் 3ஆயிரத்தி 180 கிலோ உணவுப் பொருட்கள் தயார் நிலையில் உள்ளது. 
மதுரை விமான நிலையத்தில் இருந்து புயலால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு மூன்றாவது நாளான இன்று (21.12.23) காலை 4.30 மணிக்கு மத்திய தொழிலில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல் துறை, வருவாய்த்துறையினர் உதவியுடன் ஹெலிகாப்டரில் உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டு தயார் நிலையில் இருந்தது. காலை ஆறு மணிக்கு புறப்பட வேண்டிய ஹெலிகாப்டர் வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுவதால் காலை 7:30 மணிக்கு கிளம்புவதாக கூறப்பட்டுள்ளது. தற்போது 3 ஆயிரத்து 180 கிலோ எடையுள்ள உணவு, குடிநீர், மருத்துவ பொருட்களை ஏற்றி தயார் நிலையில் 3 ஹெலிகாப்டர்களும் தூத்துக்குடி புறப்பட தயாராக உள்ளது.