• Fri. Apr 26th, 2024

துவண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்ட 3 நாள்

ByA.Tamilselvan

May 13, 2022

காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் ஆலோசனைக் கூட்டம் – சோனியா காந்தி தலைமையில் இன்று தொடங்குகிறது
இனி காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலமில்லை என்னும் அளவுக்கு நிலை மோசமடைந்துள்ளது.மாநில சட்டசபை தேர்தல்,நாடாளுமன்ற தேர்தல் என தோல்வி மேல் தோல்வி சந்தித்துவருகிறது.. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. பஞ்சாபிலோ ஆம் ஆத்மியிடம் ஆட்சியை இழந்தது.
தொடர் தோல்விகளால் அதிர்ச்சி அடைந்த குலாம் நபி ஆசாத், கபில்சிபல், சசி தரூர், ராஜ் பப்பர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தலைமை மாற்றத்தை வலியுறுத்தி சோனியாவுக்கு கடிதம் எழுதியதுடன் அதிகாரக் குவியல் இல்லாமல் அனைத்து மட்டங்களிலும் முடிவெடுக்கும் அதிகாரம் வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
அதைத் தொடர்ந்து மார்ச் 14 ஆம் தேதி டெல்லியில் கட்சியின் செயற்குழு கூட்டப்பட்டது. அப்போது ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் சிலர் வலியுறுத்தினர். எனினும் சோனியா காந்தி தற்காலிக தலைவராக தொடர்வார் என்றும் சிந்தன் ஷிவிர் எனும் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பான தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவது என்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சிந்தன் ஷிவிர் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக வியூகங்கள் வகுக்கப்படவுள்ளது.
சோனியா காந்தியின் தொடக்கவுரையுடன் துவங்கவுள்ள இக்கூட்டத்தில் கடைசி நாளான ஞாயிறன்று, ராகுல் காந்தி நிறைவுரை ஆற்றவுள்ளார் இந்த 3 நாள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் வளர்ச்சி பெறுமா என தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *