மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள பண்ணைகுடி கிராமத்தில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் முடித்து, கள்ளழகர் அழகர் மலை நோக்கி செல்லக்கூடிய நாளில், ஆண்டுதோறும் பாரம்பரிய வழக்கப்படி கிராம பொதுமக்கள் சார்பாக சிறப்பு அன்னதானம் வழங்கப்படும். அதேபோல், நேற்றும் அங்குள்ள மந்தை திடலில் பிரம்மாண்ட பந்தல் அமைத்து கிராம காவல் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்திய பின்பு பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது .
இந்த அன்னதான ” விழாவிற்கு ஏற்பாடுகளை, பண்ணைகுடி கிராம பொதுமக்கள் சார்பாக செய்திருந்தனர்.
பண்ணைக்குடி கிராமத்தில் அழகர் மலையானுக்கு அன்னதானம்
