• Fri. Mar 29th, 2024

3 வேளாண் சட்டங்களும் ரத்து.. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Byகுமார்

Nov 19, 2021

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 11 மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும், அதை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முறையாக திரும்பப் பெறப்படும் எனத் அறிவித்தார். இந்த அறிவிப்பை தற்போது அனைத்து தரப்பினரும் வரவேற்று வருகிற நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் தொடர்ந்து இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை காளவாசல் சந்திப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி இந்த அறிவிப்பை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக காளவாசல் சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும், அடிபணிந்த மோடி அரசு என வாசகங்கள் பொருந்திய பதாகைகளை ஏந்தி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *