• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

பாஜகவில் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Byவிஷா

Mar 14, 2024

விரைவில் மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், பாஜக தனது 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் பாஜக சமீபத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில், 34 அமைச்சர்களுக்கு மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மக்களவை தேர்தல் 2024-க்காக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், கர்நாடகா, மத்திய பிரதேசம், அரியானா, இமாச்சலப்பிரதேசம், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரம், தெலங்கானா, திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து 72 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இப்பட்டியலிலும், தமிழ்நாட்டில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு இடம்பெறவில்லை. 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.