• Thu. May 30th, 2024

2022 தமிழ் சினிமா சிறப்பு பார்வை சாதனை நிகழ்த்திய படங்கள்

2022ம் ஆண்டில் தியேட்டர்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை 196ஓடிடி தளங்களில் 27 படங்கள் நேரடியாகவெளியாகி உள்ளன. வழக்கம் போலவே சுமார் பத்து, பதினைந்து படங்கள் மட்டும்தான் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன.

இந்த 196படங்களில் சுமார் 100 படங்கள் வரை எதற்காகத் தயாரிக்கப்பட்டது, எதற்காக வெளியானது என்பது அந்தப் படங்களை எடுத்தவர்களுக்கே தெரியாதுஅதில் சில படங்களின் டிரைலர்கள் கூட யூ டியூபில் கிடையாது. சில படங்களைப் பற்றி கூகுளில் தேடினால் கூட கிடைக்காது. சினிமா டிஜிட்டலுக்கு மாறிய பிறகு ஒவ்வொரு ஆண்டும் இது போல நிறைய படங்கள் வெளிவருகிறது. அவை ஒரு நாள் ஏன் ஒரு காட்சி கூட தியேட்டர்களில் தாக்குப் பிடிக்காமல் ஓடி விடுகின்றன என்பதுதான் உண்மை.ரஜினிகாந்த் நடித்த படம் தவிர மற்ற முன்னணி கதாநாயகர்களின் நடிப்பில் படங்கள் வெளிவந்துள்ளன. 100 வருட கால தமிழ் சினிமாவில் இந்த 2022ம் ஆண்டில் தான் மொத்த வசூல் 1700 கோடியைத் தாண்டி இருக்கிறது. அதில், ‘பொன்னியின் செல்வன், விக்ரம்’ இரண்டு படங்கள் மட்டுமே 900 கோடி வசூலைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தப் படங்களுடன், இந்த ஆண்டில் வசூல் ரீதியாக முதல் 10 இடங்களைப் பிடித்த படங்களைப் பற்றிப் பார்ப்போம்.

 1. பொன்னியின்செல்வன்

கல்கி எழுதிய சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ஐ பலரும் திரைப்படமாக எடுக்க முயன்று முடியாமல் போய் கைவிட்டார்கள். ஆனால், அதை இரண்டு பாகங்களாக எடுத்து முதல் பாகத்தை வெளியிட்டு சாதனை படைத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். படம் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் தங்களது அபிமான நாவலைத் திரைப்படமாகப் பார்க்க நாவல் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் தியேட்டர்களை நோக்கி படையெடுத்தார்கள். அதன் காரணமாக இந்தப் படம் உலக அளவில் 500 கோடி வசூலைக் கடந்துவெற்றியைப் பெற்றது. இப்படத்திற்குதமிழக அளவில் சுமார் 190 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆனது

 1. விக்ரம்

காலத்திற்கேற்றபடி தன்னை மாற்றிக் கொள்வதில் கமல்ஹாசனுக்கு நிகர் யாருமில்லை என்று கோலிவுட்டில் சொல்வார்கள். இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜுடன் கமல்ஹாசன் இணைகிறார் என்ற செய்தி வந்த போதே திரையுலகத்தினரும், ரசிகர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அந்த ஆச்சரியம் படம் வெளிவந்ததும் பேராச்சரியமாக மாறியது. கமல்ஹாசன் நடிக்க இப்படி ஒரு ஆக்ஃக்ஷன் படமாஎன ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும் வியந்து பார்த்தார்கள். தனது 60 வருட கால திரையுலகப் பயணத்தில் கமல்ஹாசன் இப்படி ஒரு வசூலை முதல் முறையாகப் பார்த்தது இல்லை உலக அளவில் சுமார் 468 கோடி வசூலைக் கடந்த, இப்படத்தின் தமிழக மொத்த வசூல் 182 கோடி ரூபாய்

 1. பீஸ்ட்

நெல்சன் திலீப்குமார், விஜய் புதிய கூட்டணி என்றதும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பட வெளியீட்டிற்கு முன்பாக வெளியான ‘அரபிக்குத்து’ பாடலும் சூப்பர் ஹிட்டானதால் அதுவே படத்திற்கு நல்ல அறிமுகத்தையும் கொடுத்தது. ஆனால், எதிர்பார்த்த ‘மாஸ்’ படத்தில் இல்லாதது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஒரே ஷாப்பிங் மாலுக்குள் முழு கதையும் நகர்ந்ததும் ரசிகர்களை போரடிக்க வைத்தது. இருப்பினும் விஜய் படங்களுக்கென இருக்கும் ரசிகர்கள் படத்தைப் பார்த்ததால் தமிழகத்திலும் 100 கோடி வசூலைக் கடந்தது.உலக அளவில் 220 கோடி வசூலித்ததாகச் சொல்லப்படும் இப்படத்தின் தமிழக வசூல் 115 கோடி என்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம்.

 1. வலிமை

நேர்கொண்ட பார்வை’ படத்தில் முதல் முறையாக இணைந்த அஜித்குமார்இயக்குனர் வினோத் கூட்டணியில் வெளிவந்த இரண்டாவது படம் ‘வலிமை’. புதிதாக ஒரு ஆக்க்ஷன் கதையைக் கொடுத்திருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் போதைப் பொருள் கடத்தல், போலீஸ் கதை என கொஞ்சம் பொறுமையை சோதித்த படமாக அமைந்தது. ‘விஸ்வாசம்’ படத்திற்குப் பிறகு அதை முறியடிக்கும் ஒரு வெற்றி அஜித்குமாருக்கு இந்தப் படம் மூலம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்து பொய்யாகிப் போனது. உலக அளவில் 200 கோடியைக் கடந்ததாகச் சொல்லப்படும் இப்படத்தின் தமிழக வசூல் 94 கோடி ரூபாய்

 1. டான்

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயர்களில் ஒருவராக இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். அவரது திரையுலகப் பயணத்தில் முதல் முறையாக 100 கோடி வசூலைக் கடந்த படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. இந்தப் படம் எதற்காக ஓடியது, ஏன் ஓடியது என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அவ்வளவு சிறப்பான கதையுமல்ல, விறுவிறுப்பான திரைக்கதையுமல்ல, ஆனால் படம் ஓடிவிட்டது.விஜய், அஜித்குமாருக்கு பிறகு இந்த ஆண்டில் அதிக வசூலைக் குவித்த ஒரு படத்தின் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் முன்னேறிவிட்டார்.உலக அளவில் இப்படம் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் மொத்த வசூல் 78 கோடி ரூபாய்

 1. திருச்சிற்றம்பலம்

பெரிய அளவில் விளம்பரம், ஒரு பரபரப்பு என வெளியீட்டிற்கு முன்பு எதையும் ஏற்படுத்தாமல் படம் வெளிவந்த பின்பு அப்படம் பற்றி சமூகவலைதளங்களில் வெளியான பதிவுகள், விமர்சனங்கள் படத்தை வெகுஜனங்கள் விரும்பி பார்க்ககூடிய படமாக மாற்றியது“யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன்’ படங்களுக்குப் பிறகு தனுஷ், இயக்குனர் மித்ரன் ஜவஹர் கூட்டணி மீண்டும் ஒரு சுவாரசியமான படத்தைக் கொடுத்து வெற்றி பெற்றது.
உலக அளவில் இப்படம் 100 கோடி வசூலைக் கடந்ததாகத் தகவல். தமிழகத்தில் 75 கோடி மொத்த வசூல் செய்தது

 1. சர்தார்

இயக்குநர்மித்ரன், நடிகர்கார்த்தி கூட்டணியில் உருவான முதல் படம் சர்தார் படத்தின் டிரைலர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கேற்றபடி படமும் மாறுபட்ட ஆக்க்ஷன் படமாக அமைந்து ரசிகர்களை ரசிக்க வைத்தது. கார்த்தியின் திரையுலக வாழ்க்கையில் சர்தார் படத்தின் வசூல் புதிய உச்சத்தை தொட்டது
உலக அளவில் ‘சர்தார்’ படம் 100 கோடி வசூலைக் கடந்ததாக சொல்லப்பட்டது. தமிழக அளவில் 52 கோடி ரூபாய்மொத்த வசூல் செய்தது சர்தார்

 1. லவ் டுடே
  அறிமுக நடிகரின் படம் தமிழ் சினிமாவில் 70 கோடி வசூலைக் கடந்து முதன் முறையாக சாதனை நிகழ்த்திய படம் லவ் டுடே
  ‘கோமாளி’ படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் தனது இரண்டாம் படத்திலேயே நாயகனாக அறிமுகமானார். இளம் ரசிகர்களைக் கவர்ந்த இந்தப் படம் யாரும் எதிர்பார்க்காத பெரியதொரு வெற்றியைப் பெற்றது.தமிழகத்தில இந்தப் படத்தின் மொத்த வசூல் 55 கோடி ரூபாய்
 1. விருமன்

‘கொம்பன்’ படத்திற்குப் பிறகு கார்த்தி, இயக்குனர் முத்தையா கூட்டணி இணைந்த படம். மீண்டும் ஒரு கிராமத்துக் கதை. அப்பாவை எதிர்த்து நிற்கும் ஒரு மகனின் கதை. இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ‘கொம்பன்’ அளவிற்கு விமர்சனங்களையும், வரவேற்பையும் பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது.தமிழகத்தில் மொத்த வசூல் 50 கோடி ரூபாய்

 1. காத்துவாக்குல ரெண்டு காதல்

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, நயன்தாரா, சமந்தா ஜோடி இணைந்து நடித்த படம் விஜய்சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் வெற்றி பெற்ற ஒரே படம் காத்துவாக்குல ரெண்டு காதல்இப்படத்தின் தமிழக வசூல் 33 கோடி ரூபாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *