• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

2022-ம் ஆண்டு இந்தியாவுக்கு மிகவும் அற்புதமானது – பிரதமர்

ByA.Tamilselvan

Dec 25, 2022

மன்கி பாத் நிகழ்ச்சியில் பேசும் போது பிரதமர் 2022ம் ஆண்டு இந்தியாவுக்கு ஆற்புதமான ஆண்டாக அமைந்ததாக பேசினார்.
பிரதமர் மோடி மன்கி பாத் நிகழ்ச்சியில் பேசும்போது 2022-ம் ஆண்டு இந்தியாவுக்கு மிகவும் அற்புதமானது. உலக பொருளாதாரத்தில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
உலகின் பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை காண்கிறோம். நாம் கவனமாக இருக்கவேண்டும் மற்றும் முக கவசம் அணியவேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளில் இருக்கும் மக்கள் கொரோனா விதிகளைப் பின்பற்ற வேண்டும். விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கும் நாட்கள் வைரசால் பாதிக்கப்படுவிடக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக சுகாதாரத் துறையில் பல்வேறு சவால்களை நாம் சமாளித்து வருகிறோம். பெரியம்மை, போலியோ போன்ற நோய்களை இந்தியாவில் இருந்து ஒழித்துவிட்டோம். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் யோகா செய்தால் நல்ல பலன் கிடைக்குமென ஆய்வில் தெரியவந்துள்ளது. நோயாளிகள் தொடர்ந்து யோகா செய்வதால் நோய் மீண்டும் வருவது 18 சதவீதம் குறைக்கப்படுகிறது. மருத்துவ அறிவியலில் யோகாவும் ஆயுர்வேதமும் ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சி மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.