• Thu. Dec 5th, 2024

ரூ.200 கோடி மோசடி வழக்கில்
நடிகை நோரா பதேகி ஆஜர்

ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை நோரா பதேகி அமலாக்க அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கில் பல நடிகைகள் ஏற்கனவே விசாரிக்கப்பட்டனர். சுகேசிடம் மிகவும் நெருங்கி பழகிய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இந்த வழக்கில் ஜாமீனில் இருக்கிறார். வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட மற்றொரு நடிகை நோரா பதேகி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் விசாரிக்கப்பட்டார். அப்போது, தனக்கும், இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்தார். சுகேசுடனான தனது வாட்ஸ்-அப் உரையாடல் பதிவுகளையும் காண்பித்தார். இந்த நிலையில் வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் அவருக்கு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன்பேரில் அவர் நேற்று பிற்பகலில் அமலாக்க இயக்குனரகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *