புதுக்கோட்டை மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள ஒத்தக்கடை என்ற இடத்தில் குடிபோதையில் இளைஞர்கள் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் அச்சத்தை விளைவிக்கும் வண்ணம் பிறந்தநாள் விழா என்ற பெயரில் மது போதையில் பொது சொத்துக்களையும் தனியார் சொத்துக்களையும் சேதமாக்கிய விவகாரத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இது பற்றிய காணொளி சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா சார்பில் கடுமையான எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.. அதில் காவல் துறையின் எச்சரிக்கையை மீறி இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. மேலும் சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

கடந்த நாலாம் தேதி அன்று சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் மது போதையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கடைகளில் முன்பு வைக்கப்பட்டிருந்த பதாகைகள் பொருள்கள் மற்றும் மேஜைகளை சேதப்படுத்தியும் அதை அவர்களே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர் அந்த வீடியோ வைரலான நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவத்தப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களை தற்போது கைது செய்து உள்ளனர். மேற்கொண்டு இச்சம்பத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..