• Sun. Oct 6th, 2024

பாகிஸ்தானில் 18 மணி நேரம் மின் தடை

ByA.Tamilselvan

Apr 30, 2022

பாகிஸ்தானில் கடுமையான எரிசக்தி நெருக்கடி, நாட்டில் நீடித்த மின் தடையை மோசமாக்கியுள்ளது. இதனால், பாகிஸ்தானின் பல பகுதிகள் 18மணி நேரத்திற்கு மேலாகநீண்ட நேர மின்வெட்டு பிரச்சனையை சந்தித்து வருகிறது.
இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் கடும் பொருளாதாரநெருக்கடியில்சக்கி வருகின்றன.குறிப்பாக முதலில் இலங்கை ,பின்பு பாகிஸ்தான் தற்போது நேபாளமும் நெருக்கடியில் சிக்கியுள்ளாதாகதகவல்கள் வருகின்றன. பொருளாதார நெருக்கடி என்பது முதலில் மின் தடை மூலமாக மட்டுமே உருவாகிறது. மின்வெட்டு அதிகரிக்கும் போது தொழில்கள்பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடி அதிகரிக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தானில்
நகர்ப்புறங்களில் 6 முதல் 10 மணிநேரம் வரையிலும், கிராமப்புறங்களில் சுமார் 18 மணிநேரம் நீடித்த மின்வெட்டுக்கு உள்ளாகிறது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை, மற்றும் தேவை மற்றும் விநியோகத்தில் மாறுபாடு நிலவுவதன் காரணமாக மின் உற்பத்தி ஆலைகளில் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியவில்லை. இதனால், சுமார் 6,000 முதல் 7,000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீண்டநேர மின்வெட்டு, தங்களது வியாபரம்.தொழில் உற்பத்திக்கு பாதிப்பதாக சிறு வணிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அதிகரிக்கும் கோடை வெப்பம் மற்றும் மின் தேவையின் காரணமாக மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த மின்வெட்டு பிரச்சனையால், அங்குள்ள மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *