• Fri. Mar 29th, 2024

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 17 லட்சம் பேர் எச்ஐவியால் பாதிப்பு

ByA.Tamilselvan

Apr 25, 2022

தற்போது நாம் கொரோனா காலத்தில் இருக்கிறோம். 25 ஆண்டுகளுக்கு முன் உலகையே அச்சுறுத்திய எச்ஐவி பாதிப்பு இன்னும் நீடிக்கிறது. எச்ஐவி காற்றின் மூலம் பரவாது என்பது மட்டுமே ஆறுதல். ஆனால் எப்போது வேண்டுமானலும் யாருக்கும் தொற்றும் ஆபயம் உள்ளது . உடலுறவு மூலமாக மட்டுமே பரவும் என கருதப்பட்ட நிலையில் ரத்தம் வழியாக பரவும் தன்னை கொண்டது எச்ஐவி.
இந்தியாவில் கடந்த பத்து ஆண்டு களில் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவிற்கு பதில ளித்துள்ள தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) இந்தியாவில் 2011-2021க்கு இடையில் பாதுகாப்பற்ற உடலு றவு மூலம் 17,08,777 பேர் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2011-12-இல் 2.4 லட்சம் பேருக்கு எச்ஐவி பரவியது, 2020-21-இல் அது 85,268 ஆகக் குறைந்துள்ளது. மாநிலங்களைப் பொறுத்தமட்டில், ஆந்திரா- 3,18,814, மகாராஷ்டிரா- 2,84,577, கர்நாடகா- 2,12,982, தமிழகம்- 1,16,536, உத்த ரப்பிரதேசம்- 1,10,911, குஜராத்- 1,10,911 என பாதிக்கப்பட்டுள்ளனர். 2011-12 முதல் 2020-21 வரை 15,782 பேர் இரத்தம் வழியாக எச்ஐவி நோய் பரவி யுள்ளது.
2020- ஆம் ஆண்டு நிலவரப்படி, நாட்டில் 81,430 குழந்தைகள் உட்பட 23,18,737 பேர் எச்ஐவியுடன் வாழ்கின்றனர். எச்.ஐ.வி.யை முற்றாக குணப்படுத்த நவீன சிகிச்சை இல்லை. இருப்பினும், மருத்துவரின் கண்காணிப்பு, மாத்திரை களை உட்கொள்வதன் மூலம் பாதிக்கப் பட்டவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் எச்ஐவி மிகவேகமாக பரவி வந்தது. நவீன மருத்துவ வசதி கள் கிடைப்பதால் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் எச்ஐவி தாக்கம் குறைந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *