• Wed. Sep 27th, 2023

ஆரோக்கியக் குறிப்புகள்:

Byவிஷா

Apr 27, 2022

அன்னாசி பழம்:

ஓர் அன்னாசி பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து, அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இதை முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும். அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசி பழத்தில் கொழுப்பு குறைவு. நார்ச்சத்து அதிகம்; அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால், ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவற்றை நீக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *