

குரோம்பேட்டையில் புதியதாக 17 வழித்தடங்களில் அரசு மாநகர பஸ் சேவையை போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர்,
“கடந்த ஆட்சியில் 12 ஆயிரம் பேருந்து மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், தற்போதைய திமுக ஆட்சியில் 17,000-க்கும் அதிகமாக பஸ்கள் இயக்கப்படுகிறது. 4 ஆயிரம் புதிய மற்றும் நிறுத்தப்பட்ட சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களுகான ஊதிய பேச்சு வார்த்தை அடுத்த மாதம் தொடங்கும்.
தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் ஆறு இடங்களில் இருந்து 16,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.மீண்டும் தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 17 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் அதிகரிக்கப்படும்’ என அவர் கூறினார்.
