• Fri. Apr 26th, 2024

மதுரையில் 160 கோடி மதிப்பீட்டில் குழந்தைகள் நல சிறப்பு மருத்தவமனை

Byகுமார்

Jul 9, 2022

160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை அரசு ராஜாஜி குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் வழங்கப்படும் சிறப்பு சிகிச்சை போல மதுரையிலும் கிடைக்கச் செய்யும் வகையில் மதுரையில் தனி மருத்துவமனையாக குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையை அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் அனுப்பியது.
அரசின் நிதி ஒதுக்கீடு கிடைத்த பிறகு தற் போது உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனை அருகே குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை அமைவதற்கான திட்டங்கள் தயரிக்கப்பட்டன.மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு 110 கோடி, மருத்துவ உபகரணங்களை வாங்க 50 கோடி என மொத்தம் 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குழந்தைகள் மருத்துவமனையை அமைப்பதற்கான திட்டம் தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஒப்பதல் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் அரசு இராஜாஜி குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்காக 2400 சதுர.அடி பரப்பளவு கொண்ட பழைய இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பழைய இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை இடித்துவிட்டு மருத்துவமனை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள்,இடத்தின் தன்மை, சாதக பாதகங்கள் குறித்து மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர், அரசு மருத்துவமனை முதல்வர் ரத்னவேல், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இதன் மூலம் குழந்தைகளுக்காக புதிய கட்டமைப்புகளுடன் கூடிய குழந்தைகள் நல மருத்துவமனை விரைவால் மதுரையில் அமைய உள்ளது உறுதியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *