மதுரையில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் ஆனந்த விகடன், துக்ளக் உள்ளிட்ட பத்திரிகைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புஉள்ள திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் அண்ணாசரவணன் மாநில இளைஞரணி செயலாளர் பந்தல்ராஜா மாவட்ட தலைவர் புல்லட்ராம்குமார் இளைஞரணி தலைவர் பிரபு கிழக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக்மற்றும் கழக நிர்வாகிகள்தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர் இந்தஆர்ப்பாட்டத்தில் மதுரை ஆதீனம் மற்றும் இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து செய்தி வெளியிடுவதை கண்டித்தும், இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் சம்பந்தப்பட்ட பத்திரிக்கை நிறுவனங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது அதனை தொடர்ந்து அந்த பத்திரிகையை எரித்தனர் அதனைதொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைகாவல்துறையினர் கைது செய்தனர் இதனால் அப்பகுதி சில நேரம் பரபரப்பாக காணப்பட்டது
இதில் கலந்து கொண்ட மாநில இளைஞர் அணிசெயலாளர் பந்தல்ராஜா பேசுகையில், இந்து சமயத்தையும் இழிவுபடுத்துபோல் பிற மதங்களை இழிவு படுத்த முடியுமா, தொடர்ச்சியாக இதுபோன்று செய்தி வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது மட்டும் அல்ல அதற்கு மறுப்புச் செய்தியும் மன்னிப்பு கூற வேண்டும் என பேசினார்