• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள்- முதலமைச்சர், ஆளுநர் மரியாதை

ByA.Tamilselvan

Oct 2, 2022

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதன்படி, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர். மேலும், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள், மேயர் உள்ளிட்டோரும் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து, காந்தியவாதிகள் சார்பில் நடத்தப்பட்ட நூற்பு வேள்வி நிகழ்ச்சியை ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து, இன்று மாலை கிண்டியில் நடைபெறும் விழாவில் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு ஆளுநர் பரிசு வழங்குகிறார்.