உக்ரைன் போரை கண்டித்து போராடியவர்களில் 15 ஆயிரம் ரஷ்யர்கள் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு எளிதாக விசா கிடைப்பதால் இலங்கைக்கு படையெடுத்து வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் போர் தொடுத்து 2 மாதங்களுக்கு மேலாக நீடித்துவருகிறது. இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகள்நிடுநிலை வகித்தாலும்.பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக உள்ளன. இந்நிலையில் ரஷ்யாவில் அதிபருக்கு எதிராக அங்கு போராட்டங்களும் நடந்து வருகின்றன.அவர்களை ரஷ்யப் போலீசார் கைது செய்து வருகின்றனர். தங்களது உயிருக்கு பயந்து ரஷ்யாவை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை மூன்று லட்சம் பேர் ரஷ்யாவில் இருந்து பல நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் அண்டை நாடுகளான ஜார்ஜியா, துருக்கி, ஆர்மீனியா போன்ற நாடுகளில் அதிகளவில் ரஷ்யர்கள் சென்றுள்ளனர். இவர்கள் முறையான விசா மூலம் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கியதில் இருந்து, அரசியல் காரணங்களுக்காக இதுவரை 3,00,000 ரஷ்யர்கள்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். தற்போது சுமார் 15,000 ரஷ்யர்கள் இலங்கைக்கு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் உக்ரைன் மீதான போருக்கு எதிரானவர்கள்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளநிலையில் ரஷ்யர்களின் நிலை என்னாவாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
உக்ரைன் போருக்கு எதிராக போராடிய 15,000 ரஷ்யர்கள் இலங்கையில் தஞ்சம்
