• Fri. Apr 26th, 2024

அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகும் புதின்?

ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், புற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அதிபர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகி, நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலா பட்ரு ஷேவிடம் பொறுப்பை ஒப்படைக்கவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. புற்றுநோய்க்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று புதினுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக, ரஷியாவின் முன்னாள் வெளியுறவு புலனாய்வு சேவையின் தலைவர் தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாக மேற்கோள்காட்டி நியு யார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து குணமடையும் காலத்தில் புதினுக்கு தற்காலிகமாக உடல் செயலிழப்பு ஏற்படக்கூடும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

சமீப காலங்களில் புடினின் நோய் தாக்கியது போல் உள்ள தோற்றம் மற்றும் பொது இடங்களில் இயல்பற்ற பதட்டமான நடத்தை பற்றி குறிப்பிட்டுள்ள நியூயார்க் போஸ்ட், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பார்கின்சன் நோய் உட்பட பல கடுமையான நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் வதந்தி பரவியுள்ளது. இதுகுறித்து திங்களன்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ” இதுபோன்ற தகவல்களை உறுதிப்படுத்த ஆதரங்கள் எதுவும் கிடைக்கவில்லை” என்றார்.

சில நாட்களுக்கு முன்பு புடின், நிகோலாய் பட்ருஷேவிடம் இரண்டு மணி நேரம் மனது விட்டு பேசியதாகவும் நியூயார்க் போஸ்ட் மேற்கோள் காட்டி கூறியது. அவருடைய ஒரே நம்பகமான கூட்டாளியாகவும் நண்பராகவும் நிகோலாயை புடின் கருதுகிறார் “அவரது உடல்நிலை மோசமடைந்தால், நாட்டின் உண்மையான கட்டுப்பாடு தற்காலிகமாக பட்ருஷேவின் கைகளுக்குச் செல்லும் என்று அவர் அப்போது உறுதியளித்தார்.” எனவும் கூறப்படுகிறது.

நிகோலாய் பட்ருஷேவ் உள்ள ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில், புடினுக்கு நேரடியாக பதிலளிக்கும் மற்றும் ரஷ்யாவிற்குள் இராணுவ மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்கும் ஒரு செல்வாக்கு மிக்க அமைப்பாகும். புடினின் நம்பகமான கூட்டாளியாக அவர் கருதப்படுகிறார். புடினைப் போலவே, பட்ருஷேவும் ஒரு தொழில் ரஷ்ய உளவுத்துறை ஏஜெண்ட் தான். முதலில் சோவியத் KGB உடன், பின்னர் ரஷ்ய FSBவிலும் பணியாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *