• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஐரோப்பாவில் நடப்பாண்டில் 15,000 பேர் பலி .. அதிரச்சி தகவல்

ByA.Tamilselvan

Nov 8, 2022

ஐரோப்பாவில் நடப்பாண்டில் கடும் வெப்பத்தின் காரணமாக 15,000 பேர் வரை பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஐரோப்பிய நாடுகள் என்றாலே குளிந்த காலநிலை உள்ள நாடுகள் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட பருவநிலை மாறுபாடு காரணமாக கடும் வெப்பம் நிலவுகிறது. நடப்பாண்டில் மட்டும் சுமார் 15,000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்ககூடும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்த உயிரிழப்புகள் அனைத்தும் கடந்த 3 மாத கால இடைவெளியில் நடந்துள்ளன. ஜெர்மனியில் 4500 பேர் ஸ்பெயினில் 4000 பேர் ,இங்கிலாந்தில் 3200 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.