• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி? டிரம்ப் அறிவிப்பு

ByA.Tamilselvan

Nov 8, 2022

வரும் 15ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடும் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஓகியோ மாகாணத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், ‘வருகிற 15-ம் தேதி புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லகோ பண்ணை வீட்டில் வைத்து மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போகிறேன்’ என்றார். 2024ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக டிரம்ப் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் அதில் மீண்டும் இணைவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.