• Fri. Mar 29th, 2024

150 கோடி ட்விட்டர் கணக்குகள் விரைவில் நீக்கப்படும்-எலான் மஸ்க்

ByA.Tamilselvan

Dec 10, 2022

பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை எலான்மஸ்க் வாங்கியதில் இருந்து பல அதிரடி நடிவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார் . இந்நிலையில் 150 கோடி கணக்குகள் நீக்கப்படும் என தற்போது அறிவித்துள்ளார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இந்த நிலையில், பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை கடந்த அக்டோபர் 27-ம் தேதி எலான் மஸ்க் தன் வசப்படுத்தினார். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, ட்விட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் பணியாற்றி வந்த 7,500 ஊழியர்களில் சுமார் 4 ஆயிரம் பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.இந்த நிலையில் விரைவில் 150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விரைவில் 1.5 பில்லியன் கணக்குகளை நீக்கும். இவை ட்வீட்கள் மற்றும் பல ஆண்டுகளாக உள்நுழைவு இல்லாத கணக்கு நீக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *