• Mon. Oct 14th, 2024

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு சரக்கு போக்குவரத்து மூலம் ரூபாய் 149.64 கோடி வருவாய்

Byகுமார்

Nov 5, 2021

மதுரை ரயில்வே கோட்டத்தில் தூத்துக்குடி, வாடிப்பட்டி, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து நிலக்கரி, உரம், டிராக்டர்கள், கருவேலங்கரி போன்ற பொருட்கள் நாட்டில் உள்ள மற்ற ரயில் நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் இந்த நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை மதுரை கோட்டம் ரூபாய் 149.64 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 2.5 சதவீதம் அதிகமாகும். அக்டோபர் மாதம் வரை 496 சரக்கு ரயில்களில் 20521 சரக்கு பெட்டிகளில் 1299235 டன் எடையுள்ள சரக்குகள் மதுரை கோட்டத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

பயணிகள் ரயில்களில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வது, மற்றவர் பெயரில் உள்ள பயணச்சீட்டில் பயணம் செய்வது, அதிக உடமைகளை பதிவு செய்யாமல் கொண்டு செல்வது, சிறுவர் சிறுமியருக்கு அரை டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது, உரிய தனிநபர் ஆவணங்கள் இல்லாமல் பயணம் செய்வது ரயில் நிலைய வளாகத்தில் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பது போன்றவற்றிற்காக அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை பயணிகளிடமிருந்து ரூபாய் 4.75 கோடி பயணச்சீட்டு பரிசோதனை மூலம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *