• Sat. Sep 30th, 2023

14 காட்டு யானைகளால், தேயிலை தோட்டத்தில் பணிபுரிவோர்கள் அச்சம்..!

ByKalamegam Viswanathan

Aug 26, 2023

கூடலூர் அருகே முகாமிட்டுள்ள 14 காட்டு யானைகளால் தேயிலை தோட்டத்தில் பணிபுரிவோர்கள் அச்சமடைந்துள்ள நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை..

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதி ஒட்டியுள்ளதால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக கடந்த மாதம் செய்த கனமழையின் காரணமாக யானைகள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து வருகிறது. கேரளா மாநிலத்திலிருந்து கூடலூர் அருகே உள்ள அத்திகுணா உள்ளிட்ட பல்வேறு வனப் பகுதிகளுக்கு யானைகள் கூட்டம் தற்போது இடம்பெயர்ந்து வருகிறது.

இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள அத்திகுன்னா டவர் பகுதியில் குடியிருப்புகள் உள்ளது அப்பகுதியில் இன்று தேயிலைத் தோட்டத்தின் நடுவே ஆறு குட்டிகளுடன் கூடிய 14 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது இதனால் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிப்போர் அச்சமடைந்துள்ளனர் தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே ஊருக்குள் சுற்றி திரியும் காட்டு யானைகள் கூட்டத்தை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *