• Fri. Sep 29th, 2023

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது – ஆர்.பி.உதயகுமார் பேட்டி…

ByKalamegam Viswanathan

Aug 27, 2023

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளதை கண்டு திமுகவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உதயநிதி ஸ்டாலினின் பொய்புளுகு மூட்டைகளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி,

கழக பொதுச்செயளாலர் எடப்பாடியாருக்கு மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் புரட்சித்தமிழர் விருது வழங்கியதையொட்டி ,மதுரை மக்களுக்கு நன்றியை செலுத்தும் வண்ணம் மதுரை  வலையங்குளம் கருப்பசாமி கோவில் சிறப்பு வழிபாடு செய்து, பொதுமக்களுக்கு மாநாட்டு திடலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சிதுணைத்தலைவர் ஆர்.பி உதயகுமார் தலைமை தாங்கினார். அன்னதானத்தினை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார் .

இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி. வி ராஜன் செல்லப்பா, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி, விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் சரவணன், கே.தமிழரசன், எஸ்.எஸ். சரவணன், மாணிக்கம், நீதிபதி, மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது,

மதுரையில் கடந்த வாரம் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு எடப்பாடியார் தலைமை நடைபெற்றது  இந்த மாநாடு ஒரு திருப்புமுனைமாநாடாக நடைபெற்றது என அனைவரும் கூறியிருக்கின்றனர் .

இந்த மாநாட்டில் தமிழக மக்களுக்காக எடப்பாடியார் செய்த சேவையான 7.5 சகவீத இட ஒதுக்கீடு, குடிமராமத் திட்டம் ,11 மருத்துவக் கல்லூரி, எய்ம்ஸ் மருத்துவமனை, வைகை காவிரி குண்டார் இணைப்பு திட்டம் என மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்து புரட்சி செய்ததால்,  மீண்டும் இதே போல் மக்களுக்கு  புரட்சியை செய்ய வேண்டும் என்று அவருக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டத்தை மதுரை மாவட்டத்தில்  உள்ள சர்வ சமய பெரியோர்கள், சான்றோர்கள் என அனைவரும் வழங்கினார்கள். இந்தப் பட்டம் வான் உள்ளவரை, வையகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். நாளைக்கே தேர்தல் வைத்தாலும் எடப்பாடியார் முதலமைச்சராக உருவாகும் காலம் வந்துவிட்டது. மேலும் இங்கு மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக  வருதற்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது .மதுரை மண்ணின் மக்கள் மனம் குளிர இங்கு அன்னதான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திமுக அமைச்சர்கள் இந்த மாநாட்டை வெற்றி பெற வெற்றி பெறவில்லை என்று கூறியுள்ளார்களே என்ற கேள்விக்கு?

நாங்கள் எதிர்க்கட்சி, திமுக ஆளுங்கட்சி நாங்கள் என்ன சாதனை செய்தாலும் அதை குறையாக கூறுவது தான் அவர்கள் வாடிக்கை,.நாங்கள் உண்மையை சொன்னாலும், சத்தியத்தை சொன்னாலும், தர்மத்தை சொன்னாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்  மக்கள் என்ன சொன்னார்கள் என்று தான் பார்க்க வேண்டும். தமிழக மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள தமிழர்கள் எல்லோரும் எல்லோரும் பாராட்டுகின்றனர் .இந்த மாநாடு வரலாற்று திருப்புமுனை ஏற்பட்டுள்ளது என்று அனைவரும் கூறுகின்றனர்.இந்த இந்தியா அளவில் அதிர்வலையும் ஏற்படுத்தி உள்ளது அதை திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

 நிலவில் சந்திராயன் 3  தடம்பதித்து உலகம் முழுவதும் இந்தியாவின் சாதனை வரலாறு பேசுகிறது அதேபோல், அதிமுக மாநாடு உலக அளவில் உள்ள தமிழர்களின் மத்தியில் பேசப்படுகிறது இதுதான் உண்மை சத்தியம்.

அதிமுக உதவியுடன் தான் பாஜக தமிழகத்தில் காலடி எடுத்து வைத்து வருகிறது என உதயநிதி ஸ்டாலின் கூறுகிறாரே  என்ற கேள்விக்கு?

இதை சொல்வதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன அருகதை இருக்கிறது. பிஜேபி கூட்டணியில் திமுக இருந்தபோது முக்கியமான துறையை முரசொலி மாறனுக்கு பெற்றுத்தந்தவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி, முரசொலி மாறன் சுயநினைவை இழந்த போது கூட, அவர் சுடுகாடு செல்லும் வரை பாஜக கூட்டணியில் அமைச்சர் பதவியை அனுபவித்தவர் முரசொலி மாறன். 

முரசொலி மாறன் அடக்கம் செய்த பிறகு வாஜ்பாய் டெல்லி செல்லும் பொழுது தான் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

 உதயநிதி ஸ்டாலின் பேசுவது சந்தர்ப்பவாத பேச்சு, அவர்கள் பிஜேபியுடன்  கூட்டணி வைக்காமல், அவர்களுக்காக வாக்கு கேட்காமல் இருந்திருந்தால், இது போன்ற கருத்துக்களை சொல்லும்போது அவர்கள் சொல்வதில் ஏதோ நியாயம் இருக்கிறது என்று மக்கள் நினைப்பார்கள்.ஆனால் திமுகவினர் அண்ட புளுகு, ஆகாச புளுகு என்பது போல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதிகார பகிர்விலே, அமைச்சரவையிலே எல்லா சுகங்களையும் அனுபவித்து விட்டு, இன்று அவர்கள் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

 அதுவும் உதயநிதி ஸ்டாலின் வாயில் வந்ததை எல்லாம் உலறுகிறார்  பிஜேயுடன் அதிமுக எம்ஜிஆர் இருக்கும் வரை அவரது தாத்தா கோட்டைக்கு போகமுடியவில்லை, அதேபோல் அம்மா இருந்தவரை ஸ்டாலின் முதல்வராக ஆக வரமுடியவில்லை, புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆன்மா வழியில் எடப்பாடியார்  மக்கள் செல்வாக்குடன் ,மக்கள் வரவேற்புடன் மாபெரும் புரட்சியை எழுச்சி மாநாட்டை நடத்தி உள்ளார்.

 திமுக ஏமாற்று வித்தைக்காரர்கள் நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து என மக்களை ஏமாற்றியும், 520 தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றவர்களுக்கு மக்கள் வரும் தேர்தலில் வரும் தேர்தலில் தக்க பாடம் கொடுப்பார்கள் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed