• Sat. Apr 20th, 2024

தியாகி சுப்பிரமணிய சிவாவின் 138-வது பிறந்த நாள்- தருமபுரியில் மலர் தூவி மரியாதை!..

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரபட்டியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்பம்.

நேற்று தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 138-வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று தருமபுரி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்து அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யர்சினி, இஆப அவர்கள் தலைமையேற்று, தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஜி.கே.மணி (பென்னாகரம்), திரு.கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), திரு.ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.என்.பி.இன்பசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் அருகில் இருந்த விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

முன்னதாக, விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் பிறந்த நாளையொட்டி தருமபுரி மாவட்டம், தகடூர் மாவட்ட வரலாற்றுப் பேரவை பொருளாளர்/ எழுத்தாளர்/ சுப்பிரமணிய சிவா நூலாசிரியர் புலவர்.செ.கோவிந்தராசு அவர்கள் 150 புத்தகங்களையும், எழுத்தாளர் திரு.எம்.பி.கோபால் அவர்கள் 20 புத்தகங்களையும் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டப வளாகத்திலுள்ள நூலக பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திருமதி. கவிதா ராமகிருஷ்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் திரு.வேலுமணி, ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. தமிழ்செல்வி சேதுமுருகன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் திருமதி. வெண்ணிலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மு.அண்ணாதுரை, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) திரு.த.வடிவேல், பென்னாகரம் வட்டாட்சியர் திரு.பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வடிவேலன், திரு.ஜெகதீசன், பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி.கோமதி உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் வரலாற்று ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *