


அமெரிக்காவில் புத்தாண்டு தொடங்கி கடந்த 3 நாட்களில் துப்பாக்கசூட்டில் 130 பலியானதாக அதிரச்சிதகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.துப்பாக்கியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற நிலைபாடு அமெக்காவில் உள்ளது.சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காக துப்பாக்கியால் கண்முடித்தனமாக பிறரை சுட்டுத்தள்ளுகின்றனர்.பின்னர் அவர்களும் தற்கொலை செய்துகொள்கின்றனர். அந்த வகையில் புத்தாண்டு தொடங்கிய முதல் 3 நாட்களில் மட்டும் அமெரிக்கா முழுவதும் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 130-க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 குழந்தைகள் மற்றும் 11 சிறுவர்கள் உட்பட 130 பேர் தற்செயலாக அல்லது வேண்டும் என்றே கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

