• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சசிகலா நிலைதான் இபிஎஸ்க்கு வரும்

ByA.Tamilselvan

Jun 24, 2022

கட்டுக்கட்டாக இழந்த வருத்தத்தில் இபிஎஸ் இருப்பதாகவும் ,சசிகலா நிலைதான் இபிஎஸ்க்கு வரும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி பேசியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில் பொதுக்குழு கூட்டம் கூடியது.
கூட்டம் துவங்கியது முதல் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்க்கு எதிராக கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தனர். மேலும் பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கத்தை பேச விடவில்லை. இந்த கூட்டத்தின்போது பாதியிலேயே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் 2016 ல் நடந்ததுதான் இப்போதும் நடந்து வருகிறது.மேலும் சசிகலா வழியைத்தான் இபிஎஸ் பின்பற்றி வருகிறார். அவர் நிலைதான் இவருக்கும் வரும்.நீதிமன்ற தீர்ப்பு ஒருநாள் முன்னதாக வந்திருந்தால் ஏகப்பட்ட “பண்டல்கள்” மிச்சமாகியிருக்குமே என வருத்தத்தில் இருக்கிறார் பழனிசாமி என அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி .பழனிசாமி பேசியுள்ளார்.