• Thu. Apr 25th, 2024

மதுரையில் 100 நிமிட அபாகஸ் எண்கணித மராத்தான் போட்டி

Byp Kumar

May 1, 2023

மதுரையில் தென் பிராந்திய அபாகஸ் சங்கம் அறம் உலக சாதனை புத்தகத்தகம் இணைந்து நடத்திய, மாவட்டங்களுக்கு இடையேயான 100 நிமிட அபாகஸ் எண்கணித மராத்தான் போட்டி நடைபெற்றது
மதுரையில் ராஜாஜி பூங்கா சஷ்டி மண்டபத்தில் இன்றைய அவசர உலகில் குழந்தைகளும் அதற்கு ஏற்றார் போல் வேகமாக இயங்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறார்கள்.அவ்வழியில் இன்று எண் கணித பயிற்சி எனும் அபேக்கஸ் அசுர வேகம் எடுத்து வருகிறது.அபேக்கஸ் விரைவு கணிதம், ஞாபகசக்தி உந்துதல், ஆழ்ந்த ஒரு நிலைப்பாடு, மொத்த மூளை இயக்கம் மற்றும் ஒட்டுமொத்த கல்வி திறன் மேம்பாடு ஆகிய நற்பலன்களை தருகிறது.


தென் பிராந்திய அபாகஸ் சங்கம் அறம் உலக சாதனை புத்தகத்தகம் இணைந்து நடத்திய, மாவட்டங்களுக்கு இடையேயான 100 நிமிட அபாகஸ் எண்கணித மராத்தான் மதுரை ராஜாஜி பூங்கா சஷ்டி மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் 5 முதல் 16: வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரத்து நூற்றி இரண்டு விரைவு எண் கணித செயல்பாடுகளை அனைத்து குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டு 100 நிமிடத்தில் முடித்து புதிய உலக சாதனை படைத்து அறம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக, தனியார் பள்ளிகளுக்கான மதுரை மாவட்ட கல்வி அதிகாரி திருமதி P.கோகிலா அவர்களும், கே.நடராஜ பிள்ளைமார் சங்க மேல்நிலைப் பள்ளி தாளாளர் திரு S.முருகன் அவர்களும், மதுரை அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை மேல்நிலைப் பள்ளி தாளாளர் திரு V.N சிவக்குமார் அவர்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த SRAA ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி சுப்புலட்சுமி கண்ணன்,திருமதி சுதா உடையப்பன் மற்றும் திருமதி சுப்புலட்சுமி வீரபாபு ஆகியோரையும் பாராட்டி பரிசு வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *