• Sat. Aug 1st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தனுஷ்கோடிக்கு மேலும் 10 பேர் அகதிகளாக வருகை

ByA.Tamilselvan

Nov 24, 2022

இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு மேலும் 10 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு சமானிய மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. அந்நாடு இயல்பு நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து அகதிகளாக மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு வரும் நிலை தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே 199 பேர் அகதிகளாக வந்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்தனர்.
இலங்கையில் தலைமன்னார் பேசாலை பகுதியில் இருந்து படகு ஒன்றின் மூலமாக 3 குடும்பங்களை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் உள்பட மொத்தம் 10 பேர் வந்தனர்.