• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மலைப்பகுதி கிராமங்கள் என ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை..,

ByP.Thangapandi

Aug 1, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் உள்ள உத்தப்பநாயக்கணூர், கருமாத்தூர், எழுமலை, அத்திபட்டி பிர்க்காவிற்குட்பட்ட 50 க்கும் மேற்பட்ட தரைப்பகுதியில் உள்ள கிராமங்களை மலைப்பகுதி கிராமங்கள் என தவறுதலாக அரசாணை 44/1990 – ல் ஒதுக்கீடு செய்துள்ளதால் கிராமப்புற மக்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருவதாகவும், வீட்டு மனைகளாக மாற்றி வீடுகள் அமைத்துக் கொள்ள தடையாக உள்ள இந்த காகா எனும் மலைப்பகுதி கிராமங்கள் என்பதை ரத்து செய்ய வலியுறுத்தி உசிலம்பட்டி தாலுகா ரியல் எஸ்டேட் தொழில்முனைவோர் சங்கத்தினர் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்-யை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.,

கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு, மணிமுத்தாறு, மேகமலை – ஹைவேவிஸ் உள்ளிட்ட பகுதியில் உள்ள மலை கிராமங்களில் கடந்த திமுக ஆட்சியின் போது 46/2026 அரசாணை மூலம் ரத்து செய்து வீடு கட்ட ஒப்புதல் வழங்கியுள்ளதை சுட்டிக் காட்டி, தரைப்பகுதியான உசிலம்பட்டி பகுதியிலும், மலைப்பகுதி கிராமங்கள் என்ற அரசாணையை ரத்து செய்ய சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்க வேண்டுகோள் விடுத்தனர்.,

சட்டமன்ற உறுப்பினர் விஜய்-யும், பொதுமக்களும் இந்த கோரிக்கையை தொடர்ந்து வைத்து வருவதால் கண்டிப்பாக வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது வேண்டுகோள் வைத்து மலைப்பகுதி கிராமங்கள் என்ற அரசாணையை ரத்து செய்ய முயற்சி எடுப்பேன் என உறுதியளித்தார்.,