• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நத்தம் – பரளிபுதூர் சுங்கச்சாவடியில், சுங்கச்சாவடியை அடித்து உடைத்த 10 பேர் கொண்ட கும்பல் – சிசிடிவி காட்சிகள்

ByN.Ravi

Mar 7, 2024

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ளது பரளிபுதூர் பகுதியில், மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்
சாவடியில், அருகே உள்ள வத்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த கழிவுநீர் வாகனத்தை ஓட்டி வந்த நபருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், வாக்குவாதம் முற்றியதில் கோபமடைந்த கழிவுநீர் வாகன ஓட்டுநர் அங்கிருந்து கிளம்பி சென்ற சிறிது நேரத்தில் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 10க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட கும்பல் சுங்கசாவடி பகுதியில் இருசக்கர வாகனத்தை கொண்டு வாகனங்களை செல்லவிடாமல் மறித்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்ட கும்பல் சுங்கச் சாவடியில் இருந்த கேமராக்கள், தடுப்புகள், பூந்தொட்டிகள் உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால், மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்
சாலையில் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நத்தம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலேயே இந்த சுங்கச்சாவடியில் தான் அதிக கட்டணம் வசூலிக்
கப்படுவது குறிப்பிடத்தக்கது.