கோவை. ஜூலை. 20- கோவையில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கோவை உப்பிலிபாளையம் வரதராஜபுரம் ரோட்டை சேர்ந்தவர் அனுசியா 23, இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக உக்கடம் சென்றார். பின்னர் பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். உக்கடம் சுங்கம் பைபாசில் சென்றபோது அவரை வாலிபர் ஒருவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அனுசியா விடம் பணம் கேட்டார். பயந்துபோன அவர் அந்த வாலிபரிடம் 500 ரூபாய் கொடுத்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனா அவர் கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு தப்பி ஓடினார். இதுகுறித்து அனுசுயா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் பணம் பறித்தது தெற்கு உக்கடம் புல்லுகாட்டைச் சேர்ந்த உமர் கோயா 24, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்…