

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறிய முன்னாள் படைவீரர்கள் சிறப்பு சலுகையின் மூலம் புதுப்பித்திடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 01.01.2017 முதல் 31.12.2019 வரை மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் படைவீரர் நலஅலுவலகத்தில் வேலைவாய்ப்பு பதிவு செய்தவர்களில் தங்களின் வேலைவாய்ப்பு பதிவு 2017,2018 மற்றும் 2019வரை மூன்று ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பு புதுப்பிக்க தவறிய முன்னாள் படைவீரர்களுக்கு “அரசாணை எண்.204,தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்(ட்டி2)துறை, நாள்:28.05.2021-ன் படி”சிறப்பு சலுகையாக மூன்று மாதம் காலம்வரை புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திட தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அவர்களை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெற்றிடுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
