கன்னியாகுமரியில் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு நள்ளிரவில் நடுக்கடலில் எரிந்து சாம்பல்
மீனவர்களின் நிலை என்ன..
கன்னியாகுமரியில் மீன்பிடிக்கச் சென்ற விசைப் படகு நடுக்கடலில் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் நிலை என்ன ஆனது என்ற விபரம் தெரியவில்லை.
கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
வழக்கம் போல் நேற்று காலை 5 மணி அளவில் கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 55 கடல்மைல் தொலைவில் நடுக்கடலில் விசைப்படகு ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இது யாருக்கு சொந்தமான படகு? எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்ற விபரம் ஏதும் தெரியவில்லை.
எனினும் கடலில் படகில் சமையல் செய்யும்போது சமையல் சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
நேற்று 10-45 மணி வரை இந்த படகை கடலில் எரிந்து கொண்டிருப்பதை கரையிலிருந்த வரை பொதுமக்கள் காணமுடிந்தது. இந்த கடல் இந்த படகில் மீன் பிடிக்க சென்றவர்கள் என்ன ஆனார்கள் எந்த விபரமும் தெரியவில்லை. ஒரு படகில் டிரைவர் உட்பட 15 முதல் 20 தொழிலாளர்கள் மீன்பிடிக்கச் செல்வார்கள். அவர்கள் அனைவரும் கடலில் குதித்து தப்பி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்த முழு விவரங்கள் இன்று தெரியவரும்.