

விருதுநகர் நாராயண மடம் தெருவிலுள்ள சமுதாயக்கூடத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு விபரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, 1600 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 3000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 4600 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு விபரங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

