• Sun. Oct 6th, 2024

வணிகத்துறையில் முதலீடு இல்லாமல் போலீயாக பில் வைத்து ஏமாற்றும் வணிகர்கள் மீது நடவடிக்கை!…

Byadmin

Jul 16, 2021

வணிகத்துறையில் முதலீடு இல்லாமல் போலீயாக பில் வைத்து ஏமாற்றும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, மதுரையில் வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி பேட்டி. மதுரையில் கொரோனா தடுப்பூசி முகாமினை பத்திர பதிவு துறை மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக முதல்வர் உத்தரவின்படி மதுரை மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம் துவக்கி வைக்கப்பட்டு தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட்டு வருகிறது. எப்பொழுதெல்லாம் ஒன்றிய அரசியலிலிருந்து தடுப்பூசி வருகிறதோ அவற்றை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பினருக்கும் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தோற்று ஆயிரத்திற்கு மேல் இருந்ததை தற்போது குறைத்து 35 க்கும் குறைவாக மாறியுள்ளது. உயிரிழப்பே இல்லை என்ற நிலையை அரசு மற்றும் அதிகாரிகள் மருத்துவர்கள் உதவியுடன் குறைக்கப்பட்டுள்ளது. பத்திர பதிவுத்துறையில் சார்பதிவாளருக்கு தெரிவிக்காமல் திடீர் ஆய்வு செய்து துறையின் அரசு செயலாளர், பதிவுத் துறையின் ஐஜி மற்றும் துறை அதிகாரிகளுடன் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக ஆய்வு செய்து வருகிறேன். தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. முழுமையான மாற்றம் ஏற்படாமல் இருந்தாலும் தற்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அன் அப்ரூவல் இல்லாத இடங்களை பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளேன். முறையாக டோக்கன் சிஸ்டம் மூலமாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுஅதில் சில குளறுபடிகள் இருக்கிறது அதையெல்லாம் சரி செய்து தவறுகள் இருப்பதை சுட்டிக்காட்டியும் அதனை செய்யாதவர்கள் மீது பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளது தவறு செய்பவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பத்திரப் பதிவுத் துறையில் அதிகாரிகள் அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வணிகத்துறையில் போலி பில் மீது அதாவது முதலீடு இல்லாமல் தொழில் செய்வதாக ஏமாற்றும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த கால ஆட்சியில் நடைபெற்ற தவறுகள் தற்போது இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *