மதுரை தெற்குவாசல் மேலத்தெரு முஸ்லிம் ஜமாத் சார்பாக கொரோனா காலகட்டத்தில் பக்ரீத் பண்டிகை வருகின்ற படியால் பக்ரீத் பண்டிகைக்காக சிறப்பு நிதியாக ரூபாய் 1000 தெற்குவாசல் மேலத்தெரு ஜமாஅத் உறுப்பினர்கள் ஆயிரம் நபர்களுக்கு இன்று வழங்கினர் மேலும் வரும் காலகட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க இருப்பதாகவும் தலைவர் அப்துல் கபூர் தெரிவித்தார் இந்நிகழ்வில் செயலாளர் முகமது அஸ்லாம் மற்றும் தெற்கு வாசல் ஜமாத்தார் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.