அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பாப்பாக்குடி கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து பகல் நேரங்களில் மும்முனை மின்சாரம் பல்வேறு கிராமங்களில் வழங்கப்பட்டுவந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக மும்முனை மின்சாரம் எப்போது வழங்கப்படுகிறது என்பதே தெரியாமல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குழப்பத்திற்கு ஆளாகி, காலையில் இருந்தே அரவை மில்களில் காத்துக்கிடக்கின்றனர். காலை அல்லது மதியம் குறிப்பிட்ட நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். வாரம் ஒரு முறை காலையில் அல்லது மதியம் மும்முனை மின்சாரத்தை நேரம் குறிப்பிட்டு வழங்கினால் விவசாயிகளுக்கும், அரவை மில் வைத்திருப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் இல்லாமல் இருக்கும். எனவே அதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், பாப்பாக்குடி துணை மின் நிலையத்தை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்களை தெரிவிக்க வேண்டும் என்றும் மீன்சுருட்டி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..