• Fri. Apr 19th, 2024

குமரிமாவட்டம் கீரிப்பாறை அருகே யானை தாக்கியதில் கல்லூரி மாணவி சுயநினைவு இழப்பு,தந்தையும் படுகாயம்-போலீஸார் விசாரணை!…

Byadmin

Jul 21, 2021

குமரிமாவட்டம் கீரிப்பாறை வாழையத்துவயல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 52 ) . இவர் கீரிப்பாறை அருகே மாறாமலை எஸ்டேட் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார் . இவரது மகள் ஸ்ரீணா ( 20 ) . இவர் கோவையில் உள்ள வேளாண்மை கல்லூரியில் 2 – ம் ஆண்டு படித்து வருகிறார் . தற்போது அவர் சொந்த ஊரில் இருந்தார் . மணிகண்டன் வழக்கம் போல் காலை 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் மாறாமலை டீக்கடைக்கு புறப்பட்டார் . அந்த டீக்கடையின் அருகே உள்ள ஒரு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன . இதில் கலந்து கொள்வதற்காக மணிகண்டனுடன் மகள் ஸ்ரீணாவும் உடன் சென்றார்.தந்தை , மகள் இருவரும் சென்று கொண்டிருந்த போது , வழியில் சாலையோரம் 3 யானைகள் நின்று கொண்டிருந்தன . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் , உடனடியாக மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்றார் . ஆனால் அதற்குள் , யானை மோட்டார் சைக்கிளை காலால் எட்டி தள்ளியது . இதில் தந்தையும் மகளும் கீழே விழுந்தனர் . உடனே ஒரு யானை ஸ்ரீணாவை காலால் மிதித்தது . இதில் அவர் படுகாயம் அடைந்து வலியால் அலறி துடித்தார் . மேலும் , கீழே விழுந்ததில் மணிகண்டனின் இடது காலில் முறிவு ஏற்பட்டது . இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடி வந்தனர் . அவர்கள் கூச்சலிட்டபடி யானைகளை துரத்தினர் . பொதுமக்களை கண்டதும் யானைகள் அங்கிருந்து சென்று விட்டது.இதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த தந்தை , மகளை அப்பகுதி மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் கல்லூரி மாணவியான ஶ்ரீணா சுயநினை இழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *