முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில்
அதிமுகவில் இணைந்த அமமுகவினர்
சிவகாசி, ஜூலை 20 ; முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்நத 100க்கும் மேற்பட்ட அமமுகவினர் அதிமுகவில் இணைந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, விருதுநகர் மேற்க மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவருடன் சாத்தூர் வாசன், வெம்பக்கோட்டை மணிகண்டன், ராமராஜ்பாண்டியன், ராஜபாளையம் வேல்முருகன் உட்பட ஏராளமான அமமுகவினர் அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில் மாவட்ட கவுன்சிலர் அழகாபுரி ராஜேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றிசெல்வம், பெருமாள்சாமி, சந்தனகுமார், தமிழ்செல்வி, சிவக்குமார், ஏழாயிரம்பண்ணை சமுத்திரராஜன், ஒன்றிய கவுன்சிலர் மல்லிகாதேவி, முருகேசன் மற்றும் மேட்டமலை பூபாலன் சாத்தூர் யூனியன் முன்னாள் துணைத்தலைவர் வெங்வேங்கடசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ், சின்னமுனியாண்டி, பாலாஜி, எஸ்.எம்.கே.ரஞ்சித்பாலாஜி நடுவப்பட்டி வைரம் உட்பட 100க்கும் மேற்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், சாத்தூர் வாசன், வெம்பக்கோட்டை ராமராஜ்பாண்டியன், எதிர்கோட்டை மணிகண்டன், ராஜபாளையம் சங்கை வேல்முருகன், சிவகாசி வெங்கடேஷ் உட்பட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.