• Sat. Jun 14th, 2025
[smartslider3 slider="7"]

மிஸ் பண்ணிடாதீங்க! மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!…

Byadmin

Jul 21, 2021

மாற்றுத்திறனாளி மாணவ/ மாணவியருக்கான ஓர் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக அ) 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ரூ.1000/- ஆ) 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை
ரூ.3000/- இ) 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ரூ.4000/- ஈ) தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.4000/- உ) இளங்கலை பட்ட படிப்பிற்கு ரூ.6000/- ஊ) முதுகலை பட்ட படிப்பு மற்றும் தொழில் படிப்பிற்கு ரூ.7000/- வழங்கப்படுகிறது.

மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு 9-ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு, தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.3000/- மற்றும் இளங்கலை பட்டபடிப்பு மாணவர்களுக்கு ரூ.5000/-  மற்றும் முதகலை பட்டபடிப்பு மாணவர்களுக்கு ரூ.7000/- வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

2021-2022ஆம் நிதியாண்டு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அரசுப்பள்ளிகள்/ தனியார்
பள்ளிகள், அரசு / அரசு உதவிப்பெறும் கல்லூரிகள் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்த பட்சமாக 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவ, மாணவியர் பிறத்துறைகளில் கல்வி உதவித்தொகை பெறவில்லை என தலமையாசிரியர்/ கல்லூரி முதல்வரால் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.

2021-2022ஆம் நிதியாண்டிற்கு இம்மாவட்டத்தில் பயிலும் தகுதியான மாற்றுத்திறனாளி
மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற உரிய விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை 17, தரைத்தளம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மேற்காணும் சான்றுகளுடன் வங்கி கணக்கு புத்தக நகலுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி, தெரிவித்துள்ளார்கள்.