
கொரோனாவை சுாரணம் காட்டி இந்து கோவில்களை மட்டும் பாரபட்சமாக மூடி உத்தரவிட்டதை திரும்ப பெறக்கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்து முன்னணியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் 01.08.2021 முதல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுத்து உள்ளது. வேதனைக்குரியது ஆகும். நேற்று பாளையங்கோட்டை துதியின் கோட்டை சர்ச் மற்றும் டவுண் கிருஸ்துவ ஆலயம் உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து சர்ச்சுகளிலும் அந்த சமயத்தவர் பெருந்திரளாக வழிபாடு செய்து உள்ளனர். தெற்கு விஜயநாராயனம் மேத்தாபிள்ளை அப்பா தர்கா கந்தூரி விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று வழிபாடு செய்துள்ளனர். வள்ளியூர் கள்ளிகுளம் பனிமயமாதா சர்ச் திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றார்கள்.
இந்த சூழலில் இந்துக்களின் கோவிலை மட்டுமே மூடி வழிபாட்டு உரிமையை தடுக்கும் செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. மதசார்பற்ற நிர்வாகம் என கூறி கொண்டு மதரீதியாக பாரபட்சமாக செயல்படுவது வருந்தத்தக்கது ஆகும்.நெல்லை மாவட்ட முஸ்லீம் கிறிஸ்தவர்கள் அவரவர் வழிபாட்டுத்தலங்களில் சுதந்திரமாக வழிபடுவது போல் இந்துக்களும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுக்கு உட்பட்டு கோவில்களில் வழிபாடு செய்வதை தடுக்கும் தங்களின் உத்திரவை மறுபரிசீலனை செய்யுமாறு அனைத்து இந்து மக்கள் சார்பில் இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டனர்.
