சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கீழாயூர் காலனிபகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழகத்திலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் நகரம் 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இதில் இளையான்குடி தாலுகா பகுதியை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்திருந்தர்.
இந்நிலையில் சொந்த நிலம் இல்லாத வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகள் 130 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்தப் பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என இளையான்குடி வட்டாட்சியர் தரப்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகள் இந்த பட்டியலில் குளறுபடி உள்ளதாக வட்டாட்சியரிடம் புகார் தெரிவித்து, முறையான பரிசீலனைக்கு பிறகு இடம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதனையடுத்து மீண்டும் இந்த பட்டியலை மறுபரிசீலனை செய்ய வட்டாட்சியர் ஆனந்த் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.